» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

புஷ்கர் கால்நடைச் சந்தை : எருமைக்கு ரூ.23 கோடி; குதிரைக்கு ரூ.15 கோடி நிர்ணயம்!

புதன் 29, அக்டோபர் 2025 12:52:34 PM (IST)



ராஜஸ்தானில் நடைபெறும் புகழ்பெற்ற கால்நடை சந்தையில் கோடி கணக்கில் விலை போகும் குதிரையும், எருமையும் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துகின்றன. 

ராஜஸ்தான் மாநிலம், புஷ்கர் நகரில் வரும் 5ம் தேதி வரை நடைபெறும் சந்தையில் ஆயிரக்கணக்கான ஒட்டகங்கள் உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றில் காண்போரை வியக்க வைக்கும் அன்மோல் என்ற ஆண் எருமை சூப்பர் ஸ்டாராகி உள்ளது. இதை வளர்க்கும் ஹரியானவை சேர்ந்த தொழிலதிபர் அன்மோலுக்கு தினமும் பாதாம், முந்திரி, நெய், பால் ஆகியவற்றை உணவாக தருகிறார். 

இதன் விலை வெறும் ரூ.23 கோடி தான் என்கிறார். அன்மோல் போல் கவனம் ஈர்த்த மற்றொரு விலங்கு ஷபாஸ் என்ற குதிரை. இதன் உரிமையாளரான சண்டிகரை சேர்ந்தவர் தனது குதிரைக்கு ரூ.15 கோடி விலை நிர்ணயித்துள்ளார். குதிரை ஷபாஸ், எருமை அன்மோல் ஆகியவற்றின் வீரியமிக்க உயிரணுக்களே இவற்றின் மதிப்பை கோடிக்கணக்கில் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory