» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நகரும் ரயில் மூலம் அக்னி-ப்ரைம் ஏவுகனை சோதனை வெற்றி : ராஜ்நாத் சிங் பெருமிதம்

வியாழன் 25, செப்டம்பர் 2025 12:50:45 PM (IST)



ரயிலில் இருந்து மொபைல் லாஞ்சர் மூலமாக 2,000 கி.மீ. வரையிலான இலக்கை தாக்கும் அக்னி - ப்ரைம் ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியதற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார்.

இது தொடர்பாக ராஜ்நாத் சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "ரயிலில் இருந்து மொபைல் லாஞ்சர் மூலமாக அக்னி - ப்ரைம் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக ஏவியுள்ளது. இந்த அடுத்த தலைமுறை ஏவுகணை 2000 கி.மீ. வரையிலான இலக்கை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இது பல்வேறு மேம்பட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது.

நகரும் ரயில்களின் மூலம் ஏவுகணைகளை ஏவும் அமைப்பை உருவாக்கிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. இந்த அக்னி - ப்ரைம் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்ததற்காக டிஆர்டிஓ, எஸ்எஃப்சி மற்றும் ஆயுதப்படைகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வகை ஏவுகணை ரயில் நெட்வொர்க் மூலம் நகரும் திறனைக் கொண்டுள்ளது. இதன் மூலமாக நாடு முழுவதிலும் இருந்து, குறுகிய நேரத்தில் நமது எதிர்வினையை தொடங்க முடியும்” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory