» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

முப்படை தலைமை தளபதியின் பதவிக்காலம் நீட்டிப்பு: மத்திய அரசு உத்தரவு

வியாழன் 25, செப்டம்பர் 2025 11:11:43 AM (IST)

இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக செயல்பட்டு வரும் அனில் சவுகானின் பதவிக்காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. 

இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் "முப்படை தலைமை தளபதி மற்றும் ராணுவ விவகாரங்கள் துறை செயலாளராக இருக்கும் அனில் சவுகானின் பதவிக்காலம் வரும் 2026 மே 30 அல்லது மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராணுவத்தில் 1981ம் ஆண்டு சேர்ந்த அவர், சிறப்பான பணியாற்றியதுடன், பல்வேறு பொறுப்புகளை நியமித்துள்ளார். பல பதக்கங்களை பெற்றுள்ளார். 2022 செப்.,30 முதல் முப்படை தலைமை தளபதியாக பணியாற்றி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory