» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அரவிந்த் கெஜ்ரிவால் வெளிநாடு செல்ல உ.பி நீதிமன்றம் அனுமதி!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 4:15:43 PM (IST)
அரவிந்த் கெஜ்ரிவால் வெளிநாடு செல்ல நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உ.பி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், தனது கடவுச்சீட்டின் தற்போதைய நிலை காரணமாக வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதில் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி, அதை புதுப்பிக்க அனுமதிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால்மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த உத்தரப் பிரதேச மாநிலம், சுல்தான்பூரில் உள்ள எம்.பி/எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், கேஜரிவாலின் கடவுச்சீட்டைப் புதுப்பித்துக்கொள்ள நிபந்தனையுடன் அனுமதி வழங்கியது.
அதன்படி, அவர் வெளிநாடு செல்வதற்கு முன்பாக கோர்ட்டிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், அவர் வெளிநாடு செல்ல அனுமதி கோரிய நிலையில், அவருக்கு சிறப்பு கோர்ட்டு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அவரது வழக்குரைஞர் ருத்ர பிரதாப் சிங் மதன் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது: உச்சநீதிமன்றம் கண்டனம் !
திங்கள் 15, செப்டம்பர் 2025 4:56:10 PM (IST)

ஜிஎஸ்டி 2.0 மூலம் வரி குறையும் பொருட்கள் பட்டியல் : புத்தகத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:47:56 AM (IST)

வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் பொறியாளர்கள் முக்கிய பங்கு: பிரதமர் வாழ்த்து
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:32:03 AM (IST)

மிசோரம் மாநிலத்தின் முதல் ரயில் பாதை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
சனி 13, செப்டம்பர் 2025 12:51:08 PM (IST)

ஜக்கி வாசுதேவ் போன்ற போலி வீடியோ உருவாக்கி பெண்ணிடம் ரூ.3.75 கோடி நூதன மோசடி!
சனி 13, செப்டம்பர் 2025 12:30:17 PM (IST)

தேர்தல் வருவதால் பிரதமருக்கு மணிப்பூர் நினைவுக்கு வந்துள்ளது: கனிமொழி விமர்சனம்
சனி 13, செப்டம்பர் 2025 12:06:12 PM (IST)
