» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது: உச்சநீதிமன்றம் கண்டனம் !

திங்கள் 15, செப்டம்பர் 2025 4:56:10 PM (IST)

ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லிக்கோண்டே இருக்காதீர்கள் என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. 

தமிழகத்தில் நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஒப்பந்த செவிலியர்களுக்கும் தொகுப்பு ஊழியம் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய உரிய பணம் கிடைக்காததால் ஒப்பந்த செவிலியர்களின் ஊதியம் நிலுவையில் உள்ளது என்று தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லிக்கோண்டே இருக்காதீர்கள் என்று தெரிவித்தது. ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு என குறிப்பிட்ட சுப்ரீம் கோர்ட்டு, அதை எக்காரணம் கொண்டும் தட்டிக்கழிக்க முடியாது என தெரிவித்தது.

மேலும், இலவசங்களுக்கு கொடுக்க பணம் இருக்கிறது ஆனால் பணி செய்வர்களுக்கு தர பணம் இல்லையா? என்றும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து, இந்த வழக்கில் பதில் அளிக்க மத்திய அரசு, செவிலியர் சங்கம் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory