» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆதாரை 12-வது ஆவணமாக ஏற்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

திங்கள் 8, செப்டம்பர் 2025 3:56:20 PM (IST)

வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்ய காந்த், ஜாய்மால்யா அமர்வு முன்பாக இன்று(திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், "பீகாரில் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கு ஆதார் அட்டையை 12 ஆவது ஆவணமாக தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன்படி வாக்காளர்கள், ஆதார் அட்டையை ஒரு அடையாள ஆவணமாக தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கலாம். எனினும் ஆதார் அட்டையின் நம்பகத் தன்மை மற்றும் உண்மைத் தன்மையைச் சரிபார்க்க அதிகாரிகளுக்கு உரிமை உண்டு.

ஆதார், சட்டப்பூர்வ அந்தஸ்தைப் பெற்றிருந்தாலும் குடியுரிமைக்கான ஆவணம் அல்ல. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 23(4)-ன்படி ஆதார் ஒரு அடையாளச் சான்று. வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க, பிற 11 ஆவணங்களுடன் ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்வது குறித்து தேர்தல் ஆணையம், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்" என்று கூறியுள்ளது.

ஆதார் அடையாள அட்டையை ஆவணமாக ஏற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory