» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரஷியாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவது தொடரும் : நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

சனி 6, செப்டம்பர் 2025 12:05:40 PM (IST)

ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் விஷயத்தில் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு இந்தியா அடிபணியப் போவதில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நிர்மலா சீதாராமன், "ரஷிய எண்ணெய்யாக இருந்தாலும் சரி அல்லது வேறு எதுவாக இருந்தாலும் சரி, எங்களுக்கு ஏற்ற முடிவை எடுப்போம்.

குறிப்பாக விலை மற்றும் போக்குவரத்து போன்ற காரணிகளை நாங்கள் கருத்தில் கொள்வோம். அந்நியச் செலாவணியுடன் பெரிதும் பிணைக்கப்பட்டுள்ள எண்ணெயை எங்கு வாங்குவது என்பது முற்றிலும் நமது தேவைகளைப் பொறுத்தது.

எனவே, நாங்கள் நிச்சயமாக ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்குவோம்" என்று தெரிவித்தார். முன்னதாக ரஷியாவிடம் குறைந்த விலையில் எண்ணெய் வாங்கி இந்தியா உக்ரைன் போருக்கு உதவுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வரிவிதிப்பு கடந்த ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory