» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரள சுற்றுலா துறை சார்பாக ஓணம் விழா: முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்

வியாழன் 4, செப்டம்பர் 2025 4:49:25 PM (IST)



கேரள சுற்றுலா துறை சார்பாக ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கிய ஓணம் கொண்டாட்டம் செப்டம்பர் 5ம் தேதியுடன் நிறைவடைகிறது. கேரள மன்னன் மகாபலி சக்கரவர்த்தியின் நினைவாக ஓணம் பண்டிகை நடத்தப்படுகிறது. இந்த பண்டிகையை கேரளாவின் அறுவடை திருவிழா என்றும் அழைக்கிறார்கள். ஓணத்தின் முக்கிய நாளான திருஓணம் நாளை நடைப்பெற இருக்கிறது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாளத்தில் லோகா, ஓடு குதிரா சாடும் குதிரா, ஹிருதயபூர்வம் ஆகிய திரைப்படங்கள் வெளியானது. அதில் லோகா திரைப்படம் மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது.


கேரள சுற்றுலா துறை சார்பாக ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடைப்பெற்றது. விழாவை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். மேலும் இந்த விழாவில் நடிகர் ரவி மோகன் மற்றும் இயக்குனர் பசில் ஜோசப் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory