» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவின் பொருளாதாரத்தை கொன்றது பிரதமர் மோடிதான்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

வியாழன் 31, ஜூலை 2025 5:48:41 PM (IST)

இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது. அதைக் கொன்றது மோடிதான் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷியாவுடன் இணைந்து வர்த்தகம் மேற்கொள்வதற்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். மேலும், இந்தியாவுக்கான வரி விதிப்பு முறை ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று தன்னுடைய ட்ரூத் சோசியல் சமூக வலைதளப் பக்கத்தில், ரஷியாவுடன் சேர்ந்து இந்தியா என்ன செய்தாலும் அதுபற்றி எனக்குக் கவலையில்லை. இந்தியா, ரஷியாவுடன் சேர்ந்து வர்த்தகம் செய்தால் வீழ்ந்து கிடக்கும் அவர்களது பொருளாதாரம் மேலும் வீழ்ந்துதான் போகும். இந்தியா, ரஷியா ஆகிய இரண்டு நாடுகளும் ‘செத்த பொருளாதார நாடுகள்’ என்றும் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய "செத்த பொருளாதாரம்” என்ற கருத்துக்கு எதிர்வினையாக, பிரதமர் மோடிதான் அந்த நிலைக்கு காரணம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் ராகுல் ஒரு பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், "இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது. அதைக் கொன்றது மோடிதான். தொழிலதிபர் அதானி - மோடி இடையிலான கூட்டணி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி, இந்திய ஒருமைப்பாட்டில் ஏற்பட்ட தோல்வி, சிறு, குறு தொழில்களை அழித்தது, விவசாயிகள் நசுக்கியது, வேலையில்லாமல் இளைஞர்களின் எதிர்காலத்தையும் மோடி அழித்துவிட்டார்” எனப் பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

GaneshAug 2, 2025 - 06:50:08 PM | Posted IP 172.7*****

இவன்ஒரு commedy pice...

இந்தJul 31, 2025 - 09:15:54 PM | Posted IP 172.7*****

கலப்பட பிராமின் பப்பு வெளிநாட்டில் ஹோட்டல் , பங்களா கட்டி விட்டு பேச்சை பாருங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory