» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டிரம்ப் அறிவிப்பு எதிரொலி: இந்தியாவின் நடவடிக்கை என்ன? - பியூஷ் கோயல் விளக்கம்!

வியாழன் 31, ஜூலை 2025 5:27:52 PM (IST)

ரஷியாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் இந்தியா மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் டிரம்ப் அறித்துள்ள நிலையில், இந்தியாவின் நடவடிக்கை குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார். 

அமெரிக்காவிற்கு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புதன்கிழமை அறிவித்தார். மேலும் ரஷியாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவதற்கு இந்தியா மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இந்நிலையில் இன்று நடந்த மக்களவை கூட்டத்தில், அமெரிக்கா விதித்த பரஸ்பர வரிகள் குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உரையாற்றினார். அவர் கூறியதாவது, "சமீபத்திய நிகழ்வுகளின் தாக்கத்தை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஏற்றுமதியாளர்கள், தொழில்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, இந்தப் பிரச்சினை குறித்த அவர்களின் மதிப்பீடு குறித்த தகவல்களைச் சேகரித்து வருகிறது.

விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர், தொழிலதிபர்கள், ஏற்றுமதியாளர்கள், சிறுகுறு நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைத் துறையின் பங்குதாரர்களின் நலனைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் மிகுந்த முன்னுரிமை அளிக்கிறது. நமது தேசிய நலனைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்" என்று பியூஷ் கோயல் கூறினார்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory