» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கர்நாடகாவில் பஞ்சு மிட்டாய், கோபி மன்சூரியனுக்கு தடை: மீறினால் 7ஆண்டு சிறை!

திங்கள் 11, மார்ச் 2024 3:39:13 PM (IST)



கர்நாடகாவில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியனுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு மேற்கொண்ட ஆய்வின் முடிவில் பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப் பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு முற்றிலும் தடை விதித்தது. இந்த நிலையில், தற்போது கர்நாடக மாநிலத்திலும், பஞ்சு மிட்டாய் மற்றும் வண்ண கோபி மன்சூரியனுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் மாநில சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு கர்நாடகம் முழுவதும் 171-க்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியன் மாதிரிகளை ஆய்வுக்குள்படுத்தினர். இதில் 107 இடங்களில் பாதுகாப்பற்ற செயற்கை நிறமிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், பஞ்சு மிட்டாய்களில் தீங்கு விளைவிக்கும் "ரோடமைன் பி" மற்றும் கோபி மஞ்சூரியனில் "டாட்ராசின்" ஆகிய ரசாயனம் கலக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது பாதுகாப்பற்றது என்று அவர் கூறினார். உணவு தயாரிக்கும் உணவகங்களில் இதுபோன்ற ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். மேலும் உத்தரவைக் கடைப்பிடிக்காவிட்டால் அவர்களின் உரிமமும் ரத்து செய்யப்படலாம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. அதேசமயம் வெள்ளை நிற பஞ்சு மிட்டாய் போன்ற இயற்கையான ஒன்றை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory