அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள லியோ படத்தின் நா ரெடி பாடல்!

Sponsored Ads


அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள லியோ படத்தின் நா ரெடி பாடல்!
பதிவு செய்த நாள் வெள்ளி 23, ஜூன் 2023
நேரம் 9:56:12 AM (IST)

விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் முதல் பாடலான நா ரெடி பாடல் விஜய் குரலில் வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்துள்ளார். இதில் த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்துள்ளனர். இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில், லியோ படத்தின் முதல் பாடலான நா ரெடி பாடல் விஜய் குரலில் வெளியாகியுள்ளது. இப்பாடல் துள்ளள் பாடலாக வெளியாகியுள்ளது. இதில் விஜய்யுடன் 100க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் நடனமாடி உள்ளனர். இப்பாடலை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.



Thoothukudi Business Directory