உதயநிதி - நயன்தாரா - நடிக்கும் நண்பேன்டா படத்தின் டிரைலர்

Sponsored Ads


உதயநிதி - நயன்தாரா - நடிக்கும் நண்பேன்டா படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் வெள்ளி 26, டிசம்பர் 2014
நேரம் 8:22:42 PM (IST)

ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல் படங்களைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் படம் நண்பேன்டா. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இது கதிர்வேலன் காதல் படத்தில் இணைந்த இந்த ஜோடி இப்படத்தில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் இயக்குநர் ராஜேஷிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ஜெகதீஷ் நண்பேன்டா படத்தை இயக்கிஉள்ளார். உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படங்களில் எல்லாம் சந்தானத்துக்கு ஹீரோவுக்கு சமமான கதாபாத்திரம் இருக்கும். நண்பேன்டா படத்திலும் வழக்கம்போல் சந்தானமும் இருக்கிறார். சந்தானம் இருந்தாலும், நண்பேன்டா முழுக்க முழுக்க காமெடிப் படம் இல்லையாம். வழக்கத்துக்கு மாறாக, இந்தப் படத்தை காமெடி கலந்த த்ரில்லர் படமாக உருவாக்கியிருக்கிறார்களாம்.



Thoothukudi Business Directory