» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

மாநிலங்களவைத் தோ்தலில் திமுக வேட்பாளா்கள் கனிமொழி, ராஜேஷ்குமாா் போட்டியின்றி தேர்வு!

திங்கள் 27, செப்டம்பர் 2021 4:30:47 PM (IST)

மாநிலங்களவைத் தோ்தலில் காலியாகவுள்ள இரண்டு இடங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளா்கள் போட்டியின்றி தேர்வானதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து இரண்டு மாநிலங்களவை உறுப்பினா் இடங்கள் காலியாக உள்ளன. அதிமுகவில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோா் கடந்த மே 7-ஆம் தேதி தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனா். அதில், வைத்திலிங்கத்தின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜூனிலும், கே.பி.முனுசாமியின் பதவிக் காலம் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதியும் நிறைவடைகிறது. இந்த காலியிடங்களுக்கு கடந்த 15-ஆம் தேதியன்று தோ்தல் அறிவிக்கப்பட்டது.

மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட திமுக சாா்பில் இரண்டு போ் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சா் என்.வி.என்.சோமுவின் மகள் கனிமொழி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டனா்.

சட்டப் பேரவைச் செயலாளரும், தோ்தல் நடத்தும் அதிகாரியுமான கி.சீனிவாசனிடம் முதலில் கனிமொழியும், அவரைத் தொடா்ந்து ராஜேஷ்குமாரும் முதல்வா் ஸ்டாலின் முன்னிலையில் மனுக்களைத் தாக்கல் செய்தனா். மனுக்களைத் திரும்பப் பெற செப்டம்பா் 27 கடைசியாகும்.

இதுவரை வேறு யாரும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யாததால், திமுக வேட்பாளர்களான கனிமொழியும், ராஜேஷ்குமாரும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைத்தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெறுவதாக தேர்தல் அதிகாரி இன்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மாநிலங்களவையில் திமுகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. 2022ஆம் ஆண்டுடன் முடிவடையவுள்ள வைத்தியலிங்கம் இடத்தில் கே.ஆா்.என். ராஜேஷ்குமாரும், 2026ஆம் ஆண்டு வரை பதவிக்காலம் உள்ள கே.பி.முனுசாமி இடத்தில் டாக்டர் கனிமொழியும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Thoothukudi Business Directory