» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

இது உண்மைக்கு கிடைத்த வெற்றி : இடைத் தேர்தல் முடிவு குறித்து முதல்வர் பழனிச்சாமி பேச்சு

வியாழன் 24, அக்டோபர் 2019 1:35:45 PM (IST)இது உண்மைக்கு கிடைத்த வெற்றி என இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி குறித்து முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி பேசினார்.

நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி கிட்டத்திட்ட உறுதியாகியுள்ளது. இதனால் அதிமுகவினர் உற்சாகமாகியுள்ளனர். இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மதியம் வந்தார். தொடர்ந்து தொண்டர்களிடம் அவர் பேசியதாவது, எதிர்பார்த்தபடி இரண்டு இடைத்தேர்தல் முடிவுகளிலும் வாக்காளப் பெருமக்கள் மாபெரும் வெற்றி அளித்துள்ளார்கள் இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் பொய்யான பிரச்சாரத்தை அளித்து திமுக வெற்றி பெற்றது. ஆனால் தற்போது மக்கள் தற்போது அதனை புரிந்து கொண்டு அதிமுகவை வெற்றி பெற செய்துள்ளனர். இவ்வாறு முதல்வர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory