» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

திமுகவின் புளுகு மூட்டை விக்ரவாண்டியில் எடுபடாது : ராமதாஸ் பிரசாரம்

புதன் 16, அக்டோபர் 2019 12:42:39 PM (IST)

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் புளுகுமூட்டை விக்ரவாண்டியில் எடுபடாது என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் சாடியுள்ளார்.

அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வனை ஆதரித்து விக்ரவாண்டியில் நேற்றிரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் "பொய் பேசுவது திமுகவினருக்கு கை வந்த கலை. மு.க.ஸ்டாலின் வண்டி வண்டியாக அள்ளிவிடும் பொய்கள் விக்ரவாண்டி தொகுதியில் எடுபடாது. இட ஒதுக்கீடு போராட்டத்தில் 21 பேர் உயிரிழந்ததற்கு திமுக தான் காரணம். சாலை மறியல் போராட்டம் நடத்துவது பற்றி 6 மாதத்திற்கு முன்பே கருணாநிதிக்கு தாம் கடிதம் எழுதியும், முப்பெரும் விழாவை தள்ளிவைக்காமல் சென்னைக்கு திமுகவினரை வரவழைத்தார்.

108 ஆம்புலன்ஸ் திட்டம் என்பது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது அன்புமணி ராமதாஸ் கொண்டு வந்தது, ஆனால் அதற்கு திமுக வெற்று தம்பட்டம் அடித்து தாங்கள் தான் கொண்டுவந்தாக சொல்லித்திரிகிறது. 18 வாரத்தில் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தியவர் அன்புமணி. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக அள்ளிவிடும் கட்டுக்கதைகளை நம்ப மக்கள் தயாராக இல்லை என்று விமர்சித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory