» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

உள்ளாட்சி நிலுவை நிதி ரூ.4,900 கோடியை விடுவிக்க நிதியமைச்சரிடம் எஸ்.பி. வேலுமணி கோரிக்கை

செவ்வாய் 27, ஆகஸ்ட் 2019 10:22:23 AM (IST)



தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வர வேண்டிய ரூ.4,900 கோடி நிலுவை நிதியை விடுவிக்க வேண்டும் என்று டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வேளாண், ஊரகத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோரிடம் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திங்கள்கிழமை காலை தில்லியில் சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 14-ஆவது மத்திய நிதி ஆணையத்தின் மூலம் ரூ.1,196.27கோடி செயலாக்க மானியம், ரூ.3,780.81 கோடி அடிப்படை மானியம் ஆகியவற்றை விடுவிக்கக் கோரும் தமிழக முதல்வரின் கடிதத்தை அவரிடம் அளித்தார்.

அதேபோன்று, திங்கள்கிழமை மாலையில் மத்திய வேளாண், ஊரகத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை அவரது அலுவலகத்தில் அமைச்சர் வேலுமணி சந்தித்தார். அப்போது, 14-ஆவது நிதி ஆணையத்தின் மூலம் தமிழகத்திற்கு வரவேண்டிய செயலாக்க மானியம், அடிப்படை மானியம் உள்ளிட்டவற்றை விடுவிக்க நிதி அமைச்சகத்திற்கு பரிந்துரைக்கவும், தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 2 லட்சம் குடியிருப்புகளை பிரதமர் குடியிருப்பு சிறப்புத் திட்டத்தில் மேற்கொள்ள அனுமதி அளிக்கவும் வலியுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியதாவது:  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழகத்திற்கு 14-ஆவது நிதி ஆணையத்தின் கீழ் 2017-18, 2018-19-ஆம் ஆண்டுகளில் செயலாக்க மானியம் ரூ.1,186 கோடி, 2018-19-ஆம் ஆண்டில் இரண்டாவது தவணை மற்றும் 2019-20-ஆம் ஆண்டுக்கான முதல் தவணை சேர்த்து ரூ.3,280.80 கோடி என மொத்தம் தமிழகத்திற்கு வரவேண்டியுள்ள ரூ.4,927 கோடியை வழங்குமாறு கோரினோம். மேலும், மும்பை - பெங்களூர் தொழிலகப் பாதையை கோவை வரை நீட்டிக்கவும் நினைவுபடுத்தினோம். கோவை விமான நிலையத்தில் இருந்து துபை, புது தில்லிக்கு பன்னாட்டு விமான சேவையை வழங்க வேண்டும் என பிரதமரிடம் கோரியிருந்தோம். இதையும் நிதியமைச்சரிடம் எடுத்துரைத்தோம். கோரிக்கையை பரிசீலித்து நிவர்த்தி செய்வதாக அவர் கூறியுள்ளார். அதேபோன்று, மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் தமிழக உள்ளாட்சிக்கு வர வேண்டிய நிலுவை நிதி தொடர்பாக கோரினோம். அவரும் பரிந்துரை செய்வதாக கூறியுள்ளார் என்றார் அவர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory