» சினிமா » செய்திகள்
பராசக்தி பட சம்பள பாக்கி விவகாரம்: டான் பிக்சர்ஸ் நிறுவனம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 2, ஜூலை 2026 11:45:39 AM (IST)

'பராசக்தி' திரைப்படத்தை இயக்கிய வகையில் தனக்கு வழங்க வேண்டிய மீதமுள்ள சம்பளத் தொகையான ரூ.8.39 கோடியை வழங்கக் கோரி இயக்குநர் சுதா கொங்கரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சிவக்கார்த்திகேயன், ஸ்ரீலீலா, அதர்வா மற்றும் ரவி மோகன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் 'பராசக்தி'. ஆகாஷ் பாஸ்கரனின் 'டான் பிக்சர்ஸ்' (Dawn Pictures) தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருந்தார்.
இத்திரைப்படத்தை இயக்குவதற்காக அவருக்கு ரூ.15 கோடி சம்பளம் பேசப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், தயாரிப்பு நிறுவனம் ரூ.8.39 கோடியை வழங்காமல் பாக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த நிலுவைத் தொகையைத் தனக்கு வழங்க உத்தரவிடக் கோரி சுதா கொங்கரா நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இயக்குநர் சுதா கொங்கரா தனது மனுவில், "தனக்கான சம்பளப் பாக்கியை முழுமையாக வழங்காமல், டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் அதர்வா நடித்துள்ள 'இதயம் முரளி' என்ற புதிய திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும். மேலும், 'பராசக்தி' படத்தின் மூன்றாம் நபருக்கான உரிமைகளை வழங்கவும் தடை விதிப்பதுடன், இத்திரைப்படத்தை ஓடிடி (OTT) தளங்கள் மூலமாக வெளியிட்டதன் மூலம் கிடைத்த ஒட்டுமொத்த வருமான விபரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்" என்று கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கே.குமரேஷ் பாபு, இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாகப் படத்தயாரிப்பு நிறுவனம் வரும் ஜூலை 8-ஆம் தேதிக்குள் தகுந்த பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையைத் தள்ளி வைத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாலிவுட் சூப்பர்ஹிட் படங்களின் உண்மையான அஸ்திவாரம் பாக்யராஜ்: அனில் கபூர் நெகிழ்ச்சி!
செவ்வாய் 30, ஜூன் 2026 5:12:00 PM (IST)

ஐந்து ரூபாய் மருத்துவர் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா!
செவ்வாய் 30, ஜூன் 2026 12:05:34 PM (IST)

ஒரே மாதத்தில் இரண்டு ராஜாக்களை தமிழ் சினிமா இழந்துவிட்டது: கமல்ஹாசன் இரங்கல்!
சனி 27, ஜூன் 2026 5:50:53 PM (IST)

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
புதன் 24, ஜூன் 2026 10:36:52 AM (IST)

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஓம்!
வெள்ளி 19, ஜூன் 2026 12:30:06 PM (IST)

சின்னத்திரை உலகில் பெரும் சோகம்: இளம் நடிகை சஞ்சிதா தற்கொலை!
செவ்வாய் 16, ஜூன் 2026 4:35:12 PM (IST)

