» சினிமா » செய்திகள்
அடிச்சவன் சொல்ல மாட்டான்.. அடி வாங்குறவனாவது சொல்லணும்! - ஜனநாயகன் குறித்து அமீர் கருத்து!
வெள்ளி 20, மார்ச் 2026 4:54:34 PM (IST)

நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியாவதில் நீடித்து வரும் சிக்கல்கள் குறித்து, இயக்குநர் அமீர் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது : தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், 'ஜனநாயகன்' படத்திற்குத் தேர்தல் ஆணையத்தின் அனுமதி தேவை எனச் சொல்லப்படுவது குறித்து அமீர் பேசுகையில், "தமிழகத் தேர்தல் வரலாற்றில் இதுவரை எந்தவொரு திரைப்படமும் தேர்தல் நேரத்தில் தணிக்கை அல்லது தேர்தல் ஆணையத்தால் தடுத்து நிறுத்தப்பட்டதே இல்லை. முதல்முறையாக இப்போதுதான் அத்தகைய சூழல் உருவாகியுள்ளது," என்று குறிப்பிட்டார்.
தணிக்கைக் குழு மற்றும் படக்குழு ஆகிய இரு தரப்புமே இந்தப் படத்தில் என்னதான் பிரச்சனை என்பதை வெளிப்படையாகச் சொல்ல மறுப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்:
விஸ்வரூபம் படம் வந்தபோது குறிப்பிட்ட சமூகத்தின் மனதைப் புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், 'ஜனநாயகன்' ஒரு ரீமேக் படம். இதில் வரம்பு மீறிய காட்சிகள் அல்லது வசனங்கள் இருக்கிறதா என்பதைத் தணிக்கை வாரியமும் சொல்லவில்லை, படக்குழுவும் சொல்லவில்லை. இது ஒரு மறைமுக அஜெண்டாவாகவே தெரிகிறது."
2014-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசுக்கு ஆதரவான திரைப்படங்கள் மட்டுமே தடையின்றி வெளியாகி வருவதைச் சுட்டிக்காட்டிய அமீர், விஜய் ஒருவேளை ஆளுங்கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தால் இந்தப் பிரச்சனை வந்திருக்குமா என்பது தெரியவில்லை என்றார்.
படத்தின் சிக்கல்கள் குறித்து படக்குழு மௌனம் காப்பதைத் விமர்சித்த அவர், "எப்போதும் அடித்தவன் தான் எதற்காக அடித்தோம் என்று சொல்லமாட்டான். ஆனால், அடி வாங்குபவனாவது 'இதற்காகத்தான் என்னை அடிக்கிறார்கள்' என்று சொல்ல வேண்டும் அல்லவா? அவர்கள் சொல்லாதவரை நாம் யூகங்களின் அடிப்படையில் மட்டுமே பேச முடியும்," என்று தெரிவித்தார்.
சென்சார் சிக்கலால் ஜனவரி 9-ஆம் தேதி வெளியாக வேண்டிய 'ஜனநாயகன்' திரைப்படம், மறுதணிக்கைக்குப் பிறகும் சான்றிதழ் பெறவில்லை. தற்போது தேர்தல் ஆணையத்தின் முடிவிற்காகக் காத்திருப்பதாக மாநிலத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ள நிலையில், அமீரின் இந்தக் கருத்துக்கள் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜனநாயகன்' படக் கசிவு விவகாரம்: துணிக்கடை மேலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!
வெள்ளி 1, மே 2026 11:04:13 AM (IST)

100 மில்லியன் பார்வையாளர்கள்: யூடியூப்பில் கூலி படத்தின் பவர்ஹவுஸ் பாடல் புதிய சாதனை!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:05:45 PM (IST)

இறுதி கட்டத்தை எட்டிய ஜன நாயகன் சென்சார் பணிகள்: மே 8-ல் ரிலீஸ்? - ரசிகர்கள் உற்சாகம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:03:15 PM (IST)

சல்மான் கான் - நயன்தாரா கூட்டணியின் புதிய படம்: ஈகைத் திருநாளுக்கு வெளியீடு!
சனி 25, ஏப்ரல் 2026 11:55:40 AM (IST)

ஜனநாயகன் திரைப்படம் லீக் விவகாரம்: படத்தொகுப்பாளர் இடை நீக்கம்!
சனி 25, ஏப்ரல் 2026 11:09:09 AM (IST)

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? - கமல்ஹாசன் பதில்
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:06:07 PM (IST)

