» சினிமா » செய்திகள்

நெல்சன் இயக்கத்தில் ரஜினி - கமல் : புதிய படத்தின் புரோமோ வெளியீடு!

சனி 21, பிப்ரவரி 2026 12:32:21 PM (IST)



நெல்சன் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் புரோமோ வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் ஜூலை மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் புதிய படத்திலும் ரஜினி நடிக்கிறார். இந்தப் படத்தை ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார்.

இந்நிலையில், அடுத்ததாக ரஜினி கமல் இணைந்து நடிக்கிறார்கள். சுமார், 47 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். நெல்சனின் பாணியில் கலகலப்பான ஸ்டைலான புரோமோவாக வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

ப்ரோமோ வீடியோவில் ரஜினி, கமல், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். வீடியோவில் டீம் மியூசிக் ரெடியா இருக்கு என்று அனிருத் சொல்ல, யாரு ஹீரோ? என்று கமல்ஹாசன் கேட்க, கேட்குறாங்களா சொல்லுங்க ஜீ என்று ரஜினிகாந்த் சொல்ல இயக்குனர் நெல்சனும், அனிருத்தும் செய்வதறியாது திகைக்கின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory