» சினிமா » செய்திகள்

ரெட்ட தல கிளை​மாக்ஸ் காட்சி அனை​வரை​யும் கவரும்: அருண் விஜய் நம்பிக்கை!

புதன் 17, டிசம்பர் 2025 10:20:01 AM (IST)



ரெட்ட தல ​தப் படத்​தில் அதிக ஆக்ஷன் காட்​சிகள் இருக்​கின்றன. கண்​டிப்​பாக கிளை​மாக்ஸ் காட்சி அனை​வரை​யும் கவரும் என்று படத்தின் நாயகன் அருண் விஜய் கூறினார்.

அருண் விஜய், சித்தி இட்​னானி, தன்யா ரவிச்​சந்​திரன், ஹரீஷ் பெரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய் உள்​ளிட்​டோர் நடித்​துள்ள படம், ‘ரெட்ட தல’. கிரிஷ் திருக்​குமரன் இயக்​கி​யுள்ள இப்​படத்​துக்கு சாம். சி.எஸ் இசையமைத்துள்​ளார். பிடிஜி யூனிவர்​சல் சார்​பில் பாபி பாலச்​சந்​திரன் தயாரித்​துள்​ளார். டிச.25ம் தேதி வெளி​யாகும் இப்​படத்​தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்​னை​யில் நடை​பெற்​றது.

படக்​குழு​வினருடன் இயக்​குநர்​கள் ஏ.ஆர்​.​முரு​க​தாஸ், முத்​தை​யா, கோகுல், கிஷோர் முத்​து​ராமன், பாலாஜி வேணுகோ​பால் என பலர் கலந்து கொண்​டனர். படம் பற்றி நடிகர் அருண் விஜய் பேசும்​போது, "இந்தப் படத்தின் கதை என்னை வெகு​வாக கவர்ந்​தது. மேலும் எனக்கு சவாலாக இருந்​தது. அப்​போதே நான் இ​தில் நடிக்க வேண்​டும் என்று முடிவு செய்து விட்​டேன். இந்​தப் படத்​தின் முக்​கிய தூணாக இருந்​தது எடிட்​டர் ஆண்​டனி. படம் படு வேக​மாக இருந்​தது, அதைச் சரி​யாகக் கட் செய்து கொடுத்​துள்​ளார்.

நடிகை சித்தி இத்​னானி தனது முழு உழைப்​பைக் கொடுத்​துள்​ளார். இந்​தப் படத்​தில் அதிக ஆக்ஷன் காட்​சிகள் இருக்​கின்றன. அது நன்​றாகவே வந்​துள்​ளது. கண்​டிப்​பாக கிளை​மாக்ஸ் காட்சி அனை​வரை​யும் கவரும்” என்​றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?

திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory