» சினிமா » செய்திகள்

3,800 ஏழை குழந்தைகளின் இதய சிகிச்சைக்கு உதவிய பாடகி! - கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்!

புதன் 12, நவம்பர் 2025 10:58:12 AM (IST)

சுமார் 3,800 ஏழை குழந்தைகளின் இதய அறுவைச் சிகிச்சைக்கு உதவிய பாடகி பலக் முச்சால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

பிரபல பின்னணி பாடகி பலக் முச்சால். பாலிவுட் பாடகியான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, மராத்தி உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கிறார். தமிழில் அனுஷ்கா நடித்த ‘இஞ்சி இடுப்பழகி’ உள்பட சில படங்களில் பாடியுள்ள இவர், தனது சகோதரர் பலாஷுடன் இணைந்து, அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார்.

இதன் மூலம் ஏழைக் குழந்தைகளின் இதய அறுவைச் சிகிச்சைக்காக நிதி திரட்டி வழங்குகிறார். இதுவரை 3,800-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சைகளுக்கான நிதி உதவிகளைச் செய்துள்ளார். இதற்காக லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலும் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் அவர் இடம்பெற்றுள்ளார்.

ஏழைக் குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற ஆசை, அவர்கள் ரயில் பெட்டிகளைச் சுத்தம் செய்வதைப் பார்த்தபோது தொடங்கியது என்று தெரிவித்துள்ள பலக், இதற்கு நிதி திரட்டுவதற்காகவே இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory