» சினிமா » செய்திகள்

கமல் படத்தில் இணைந்த கவுதம் கார்த்திக்!

செவ்வாய் 5, டிசம்பர் 2023 12:47:41 PM (IST)

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைஃப்' படத்தில் கவுதம் கார்த்திக் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

‘பொன்னியின் செல்வன்' படத்துக்குப் பிறகு கமல்ஹாசன் நடிக்கும் `தக் லைஃப்' படத்தை இயக்குகிறார் மணிரத்னம். `நாயகன்' படத்துக்குப் பிறகு இருவரும் இணைவதால் இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் டீஸர் கமல்ஹாசனின் பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் `தக் லைஃப்' படத்தில் கவுதம் கார்த்திக் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மணிரத்னம் இயக்கிய `கடல்' படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் கவுதம் கார்த்திக். அவருக்கு இந்தப் படதிலும் மணிரத்னம் வாய்ப்புக் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory