» சினிமா » செய்திகள்

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புறநானூறு!

வியாழன் 26, அக்டோபர் 2023 4:59:05 PM (IST)



சுதா கொங்காரா இயக்கும் நடிகர் சூர்யாவின் 43-வது படத்திற்கு புறநானூறு எனப் பெயரிட்டுள்ளது. 

நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, அவரின் 43-வது படத்தை இயக்குநர் சுதா கொங்காரா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. முன்னதாக, சுதா கொங்காரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யா வென்றிருந்தார்.இக்கூட்டணி மீண்டும் இணைய உள்ள தகவல் எதிர்பார்ப்பை அதிகரித்தது.

இந்நிலையில், சூர்யா 43-வது படத்தை சுதா கொங்காரா இயக்குவதாகவும் படத்திற்கு புறநானூறு எனப் பெயரிட்டுள்ளதையும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக  தயாரிப்பு நிறுவனம் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இப்படத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், விஜய் வர்மா, நடிகை நஸ்ரியா ஆகியோர் நடிக்க உள்ளதையும் கூறியுள்ளனர். இது ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory