» சினிமா » செய்திகள்

நீங்கள் தான் தலைவர்!.. ரஜினியைப் புகழ்ந்த அமிதாப்!

வியாழன் 26, அக்டோபர் 2023 3:13:42 PM (IST)



நீங்கள்தான் தலைவர்,  எப்போதும் என் அன்புக்குரியவர் என்று நடிகர் ரஜினிக்கு அமிதாப் பச்சன் புகழாரம் சூட்டியுள்ளார். 

ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாப்பச்சன், ஃபகத் ஃபாஸில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்று வருகிறது.

நடிகர் அமிதாப் பச்சன் இப்படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ரஜினிகாந்த், "த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் லைகாவின் ‘தலைவர் 170’ படத்தில் எனது வழிகாட்டியான ஸ்ரீ அமிதாப் பச்சனுடன் 33 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பணியாற்றுகிறேன்.  என் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது!” எனப் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இதைப் பகிர்ந்த அமிதாப் பச்சன், "சார்.. நீங்கள் எப்போதும் என் அன்புக்குரியவர். உங்கள் படத்தின் பெயரைப் பாருங்கள். ‘தலைவர் 170’. தலைவர் என்றால் அது நீங்கள்தான். அதில் எதாவது சந்தேகம் இருக்கிறதா மக்களே? உங்களுடன் என்னை ஒப்பிட முடியாது” எனப் பதிலளித்துள்ளார்.

நடிகர்கள் ரஜினியும் அமிதாப் பச்சனும் நெருங்கிய நண்பர்கள் என்றாலும் இருவரும் இணைந்து, 'அந்தாகானூன்’ 'ஹேராஃப்தார்’, ‘ஹும்’ ஆகிய படங்களிலேயே நடித்துள்ளனர்.  அமிதாப் நடிப்பில் வெளியாகி வெற்றியைப் பெற்ற ‘டான்’ படத்தை தமிழில் ‘பில்லா’ என ரீமேக் செய்து ரஜினி நடித்திருந்தார். இது ரஜினிக்கு பெரிய வசூலைக் கொடுத்த படங்களுள் ஒன்று!


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory