» சினிமா » செய்திகள்

பிரபல இயக்குநர் சித்திக் மறைவு திரையுலகினர் அஞ்சலி!

புதன் 9, ஆகஸ்ட் 2023 5:03:46 PM (IST)



இயக்குநர் சித்திக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார். 

மலையாளம் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாக்களிலும் இயக்குநர் சித்திக், தனது ஆளுமையை நிரூபித்திருந்தார். இயக்குநர் சித்திக்கிற்கு ஷாஜிதா என்கிற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். கடந்த 1989-ல் வெளியான ‘ராமோஜிராவ் ஸ்பீக்கிங்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சித்திக், தொடர்ந்து ‘காட்ஃபாதர்’, ‘வியட்நாம் காலனி’, ’ஹிட்லர்’ உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கினார்.

தமிழில் விஜய், சூர்யா நடிப்பில் வெளியான ‘ஃப்ரெண்ட்ஸ்’ படத்தை இயக்கியிருந்தார். இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம் பெற்ற வடிவேலுவின் நேசமணி கேரக்டர் பிரபலமானது. இப்படத்தில் இடம் பெற்ற நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் பிரபலம். பின்னர் தமிழில் பிரசன்னா நடித்த ‘சாது மிரண்டா’, விஜய் நடித்த ‘காவலன்’, அரவிந்த்சாமியின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ஆகிய படங்களை இயக்கினார்.

கடந்த சில ஆண்டுகளாக, கல்லீரல் பிரச்சினைக்காக சித்திக் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, கேரளா மாநிலம், கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்றிரவு காலமானார். இயக்குநர் சித்திக்கின் மறைவு திரையுலகினரை பெரும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory