» சினிமா » செய்திகள்

புதிய தோற்றத்தில் ரஜினி: இணையத்தில் வைரல்

வெள்ளி 4, ஆகஸ்ட் 2023 12:33:08 PM (IST)



புதிய தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

’ஜெயிலர்’, ‘லால் சலாம்’ படங்களை முடித்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஓய்வெடுத்து உள்ளார். விரைவில் ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் நிலையில், ரஜினியின் புதிய தோற்றத்துடனான புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகத் தொடங்கியுள்ளது.

’ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீடு, மாலத்தீவு பயணம் என பரபரப்பாக இருந்த ரஜினி, மீண்டும் ஸ்மார்ட் ரஜினியாக சிரித்த முகத்துடன், தாடியை ட்ரிம் செய்து இருக்கும் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தை பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆலிம் ஹக்கிம் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த மாதம் 10ம் தேதி வெளியாக இருக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் டைகர் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரஜினி.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory