» சினிமா » செய்திகள்

சமூக வலைதளங்களில் திடீரென வைரலாகும் ஃபஹத் ஃபாசில்!

திங்கள் 31, ஜூலை 2023 5:30:39 PM (IST)



‘மாமன்னன்’ படத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்துள்ள பகுதிகள் மட்டும் தனியாக கட் செய்யப்பட்டு பல்வேறு பாடல்களுக்கு ஏற்றவாறு எடிட் செய்யப்பட்டு ‘மிக்ஸ்’ வீடியோக்களாக இணையத்தில் கடந்த சில நாட்களாக வைரலாகி வருகின்றன.

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூன் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாமன்னன்’. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருந்தார். படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதன் எதிரொலியாக ரூ.35 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.50 கோடி வசூலை எட்டியது. 

இந்நிலையில், கடந்த ஜூலை 27-ம் தேதி படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. திரையரங்குகளை விட ஓடிடியில் படம் வெளியான பிறகு அதன் தாக்கம் அதிகமாக இருந்தது. ஏராளமான சினிமா பிரியர்கள் படத்தின் பாசிட்டிவ், நெகட்டிவ் குறித்த விமர்சனங்களை இணையத்தில் எழுத ஆரம்பித்தனர். இந்தச் சூழலில், திடீரென சமூக வலைதளங்களில் ஃபஹத் ஃபாசில் வீடியோவும் வைரலாக தொடங்கியது. 

அதாவது ‘மாமன்னன்’ படத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்துள்ள பகுதிகள் மட்டும் தனியாக கட் செய்யப்பட்டு, அதில் ‘சாதி’யத்தை பெருமைப்படுத்தும் பாடல்கள் இணைக்கப்பட்டன. மறுபுறம் ‘தாமிரபரணி’ படத்தின் ‘கட்டபொம்மன் ஊர் எனக்கு கெட்டவன்னு பேர் எனக்கு’ போன்ற பாடல்களுடன் எடிட் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அப்படியே மாற்றாக ஒருபுறம், ‘கபாலி’ படத்தின் ‘மேட்டுக்குடியின் கூப்பாடு நாட்டுக்குள்ள கேட்காது’ என பல வெர்ஷன்களில் ஃபஹத் வீடியோ எடிட் செய்யபட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘மாமன்னன்’ படத்தை பொறுத்தவரை ஃபஹத் ஃபாசில் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் என்பது சாதியப் பெருமை அடங்கிய கவுரத்தை அடைகாக்கும் வில்லன் கதாபாத்திரம். ஆனால், இத்தகைய எதிர்மறை கதாபாத்திரத்தை ‘ஹீரோ’வாக சித்தரிக்கும் போக்கு இந்தப் பாடல்களின் மூலம் வெளிப்பட்டு வருகிறது. இந்த வீடியோக்களை சிலர் ஜாலியாக அணுகினாலும், பலர் இது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து எழுதி வருகின்றனர். அப்படியான நெட்டிசன்களின் தொகுப்பைக் காணலாம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory