» சினிமா » செய்திகள்

காகத்தால் கழுகு ஆக முடியாது: ரஜினி பேச்சு!

சனி 29, ஜூலை 2023 10:42:50 AM (IST)

"காகத்தால் ஒருநாளும் கழுகு ஆக முடியாது " என்று ‘ஜெயிலர்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று (ஜூலை 28) சென்னையில் நடைபெற்றது.

இதில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: "குடிப்பழக்கம் மட்டும் என்னிடம் இல்லாமல் இருந்திருந்தால் இப்போது இருப்பதை விட எங்கோ இருந்திருப்பேன். குடிப்பழக்கம் எனக்கு நானே வைத்துக் கொண்ட சூனியம். தயவு செய்து குடிப்பழக்கத்தை விட்டுவிடுங்கள். நீங்கள் குடிப்பதால் அம்மா, மனைவி உட்பட குடும்பத்தில் இருக்கும் அனைவருடைய வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. 

"காட்டில் சிறிய மிருகங்கள் எப்போதும் பெரிய மிருகங்களை தொல்லை செய்து கொண்டே இருக்கும். உதாரணத்துக்கு சிறிய காகம் எப்போதும் பெரிய கழுகை சீண்டிக் கொண்டே இருக்கும். ஆனால், கழுகு எப்போதுமே அமைதியாகவே இருக்கும். பறக்கும் பொழுது கழுகைப் பார்த்து காகம் உயரமாக பறக்க நினைக்கும். 

ஆனாலும் காகத்தால் அது முடியாது. ஆனால், கழுகு தன் இறக்கையை கூட ஆட்டாமல் எட்ட முடியாத உயரத்தில் பறந்துகொண்டே இருக்கும்”  ரஜினி இந்த குட்டிக் கதையை யாரை மனதில் வைத்துச் சொல்கிறார் என்று சமூக வலைதளங்களில் விவாதம் எழும். குரைக்காத நாயும் இல்லை. குறை சொல்லாத வாயும் இல்லை. நாம் நம்முடைய வேலைய பார்த்து போய்க்கொண்டே இருக்க வேண்டும்" என்று ரஜினி பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory