» சினிமா » செய்திகள்

ஆதிபுருஷ் டீசர் : கலாய்ப்புகளுக்கு இயக்குநர் விளக்கம்

புதன் 5, அக்டோபர் 2022 4:02:21 PM (IST)



ஆதிபுருஷ் படத்தின் டீசர் வீடியோ கேம் போல இருப்பதாக சமூக வலைதளங்களில் கேலிகள் அதிகரித்து வரும் நிலையில் படத்தின் இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியில் வெளியான ‘தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்' என்கிற படத்தை இயக்கி, தேசிய விருது பெற்றவர் ஓம் ராவத். இவரது இயக்கத்தில், ராமாயணக் கதையைத் தழுவி உருவாகிவரும் படம் ‘ஆதிபுருஷ்'. இந்தியாவின் பல மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தில் கதையின் நாயகனாக ‘பாகுபலி’ புகழ் பிரபாஸும், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சனோனும் நடித்திருக்கிறார்கள். டி-சீரிஸ்,ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம், ஐமேக்ஸ், 3டி முறையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இதையடுத்து, படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. டீசர் வலைதளங்களில் ட்ரோல்களை எதிர்கொண்டு வருகிறது. ‘ஆதிபுருஷ்’ டீசர் வீடியோகேமில் வரும் கேரக்டர்களைப் போல காட்சிபடுத்தப்பட்டுள்ளதும், மோசமான அனிமேஷன் காட்சிகளும்தான் ட்ரோல்களுக்கு காரணம். பல ரசிகர்கள் படத்தின் காட்சிகளை மீம்களாக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர்.

இந்நிலையில், மோசமான கிராஃபிக்ஸ் காட்சிகள் குறித்து இயக்குநர் ஓம் ராவத், "நெட்டிசன்களின் கேலியான பதிவுகளைப் பார்த்து நான் மனமுடைந்தேன். ஆனால் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. காரணம், இப்படம் ஐமேக்ஸ் மற்றும் 3D என பெரிய திரைக்காக எடுக்கப்பட்டது. அதில் பார்க்கும்போது கிராபிக்ஸ் (VFX) காட்சிகளின் தரத்தை உணர முடியும். நீங்கள் அந்த தரத்தை மொபைலில் கொண்டு வர முடியாது. என்னைக் கேட்டால் படத்தின் காட்சிகள் மற்றும் டீசரை யூடியூப் ('youtube) பதிவிட வேண்டாம் என்றுதான் நான் சொல்வேன். ஆனால், இன்றைய காலகட்டத்தில் படம் மக்களிடம் போய் சேர வேண்டும் என்பதால் இதை நாங்கள் செய்யவேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம்" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory