» சினிமா » செய்திகள்

டிசம்பரில் மீண்டும் தொடங்கும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு

திங்கள் 11, அக்டோபர் 2021 11:19:29 AM (IST)

ஒன்றரை வருடங்களுக்கு பிறகு டிசம்பர் மாதம் இந்தியன் 2 படப்பிடிப்பை மீண்டும் தொடங்க முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்துக்கு தொடர்ந்து தடங்கல்கள் ஏற்பட்டன. படத்தை ஆரம்பித்தபோதே கமல்ஹாசனின் வயதான தோற்றம் திருப்தியாக இல்லாமல் படப்பிடிப்பு சில மாதங்கள் முடங்கியது. மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியபோது கடந்த வருடம் பிப்ரவரி மாதம் கிரேன் சரிந்து படக்குழுவை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவத்தால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. 

அதன் பிறகு கமல்ஹாசன் விக்ரம் படத்தில் நடிக்கவும், ஷங்கர் தெலுங்கு படத்தை இயக்கவும் சென்று விட்டதால் இந்தியன் 2 படம் என்ன ஆகும் என்ற குழப்பம் நிலவியது. பிரச்சினை கோர்ட்டுக்கும் சென்றது. இந்தியன் 2 படத்தை தயாரிப்பு தரப்பில் கைவிட்டு விட்டதாகவும் அவ்வப்போது வதந்திகள் பரவின. இதனை படக்குழுவினர் மறுத்து வந்தனர். 

அதன்பிறகு பட நிறுவனத்துக்கும் ஷங்கருக்கும் இடையே பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து உடன்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு டிசம்பர் மாதம் இந்தியன் 2 படப்பிடிப்பை மீண்டும் தொடங்க முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கமல்ஹாசன் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியன் 2 படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory