» சினிமா » செய்திகள்

சுஷாந்த் வழக்கில் மும்பை போலீசை நம்ப முடியாது : விஷால் பட நாயகி சாடல்!

திங்கள் 3, ஆகஸ்ட் 2020 5:26:45 PM (IST)

சுஷாந்த் தற்கொலை வழக்கில் மும்பை போலீசார் நியாயமாக நடந்து கொள்வார்கள் என்று நம்ப முடியாது என நடிகை தனுஸ்ரீதத்தா தெரிவித்துள்ளார்.

தமிழில் விஷாலுடன் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தவர் தனுஸ்ரீதத்தா. இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல வில்லன் நடிகர் நானா படேகர், ஹார்னுடன் ஓகே ப்ளஸ் என்ற இந்தி படத்தில் நடித்தபோது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதனை வெளியே சொன்னதால் குடும்பத்தோடு தாக்கப்பட்டதாகவும் மும்பை போலீசில் புகார் அளித்தார். நானே படேகர் தமிழில் பொம்மலாட்டம், ரஜினியின் காலா படங்களில் நடித்துள்ளார். தனுஸ்ரீ புகாரை விசாரித்த போலீசார் ஆதாரம் இல்லை என்று தள்ளுபடி செய்து விட்டனர். 

தற்போது அமெரிக்காவில் இருக்கும் தனுஸ்ரீதத்தா இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு குறித்து கூறும்போது "மும்பை போலீசார் நியாயமாக நடந்து கொள்வார்கள் என்று நம்ப முடியாது. குற்றவாளிகள் மற்றும் அரசியல் வாதிகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள். என் விஷயத்தில் ஆதாரம் கொடுத்தும் பொருட்படுத்தவில்லை. மும்பை போலீசில் நான் கொடுத்த ஆதாரங்களை அமெரிக்க போலீசில் கொடுத்து இருந்தால் குற்றவாளிகள் இப்போது சிறைக்கு சென்று இருப்பார்கள்” என்று கூறியுள்ளார்.
   
மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory