» சினிமா » செய்திகள்

சிவா இயக்கத்தில் சூர்யாவுடன் இணையும் விஸ்வாசம் படக்குழு

புதன் 14, ஆகஸ்ட் 2019 11:26:00 AM (IST)

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படத்தில் விஸ்வாசம் படக்குழு இணைகிறது. 

சூர்யா நடித்த என்.ஜி.கே படம் கடந்த மே மாதம் திரைக்கு வந்தது. கே.வி. ஆனந்த் இயக்கும் காப்பான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. சுதா கொங்கரா இயக்கும் சூரரை போற்று படத்திலும் சூர்யா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த படத்துக்கு பிறகு சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான சிவா டைரக்டு செய்யும் படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரமும் வெளியாகி உள்ளது. இமான் இசையமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். திலீப் சுப்பராயன் சண்டை காட்சி நிபுணராக பணியாற்றுகிறார். இவர்கள் அனைவரும் விஸ்வாசம் படத்தில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. அடுத்த வருடம் கோடையில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. சூர்யா நடித்து சிங்கம் படங்கள் 3 பாகங்கள் வந்தன. இதன் 4-ம் பாகமும் விரைவில் தயாராக உள்ளது என்றும் இதன் திரைக்கதையை உருவாக்கும் பணியில் ஹரி ஈடுபட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory