» சினிமா » செய்திகள்

சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படத்தில் கவுண்டமணி?

புதன் 19, ஜூன் 2019 3:51:38 PM (IST)சந்தானம் ஹீரோவாக நடிக்க இருக்கும் படத்தில், கவுண்டமணியை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் தனக்கென்று தனி பாதையை உருவாக்கியவர்களில் கவுண்டமணி முக்கியமானவர். சக காமெடி நடிகர்களிலிருந்து கதாநாயகர்கள் வரை அனைவரையும் கலாய்த்து தள்ளுவது கவுண்டமணியின் பாணி. அவருக்கு பின்னால் அதே பாணியை கையில் எடுத்தவர் சந்தானம். வடிவேலு திரைத்துறையில் இருந்து விலகிய காலகட்டத்தில் சந்தானத்தின் இந்த பாணி வரவேற்பு பெற்றது. 

காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்துவரும் நிலையில் அவர் நடிக்கும் புதிய படத்தில் கவுண்டமணியை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. பூமராங் படத்தை இயக்கிய கண்ணன் இந்தப் படத்தை இயக்குகிறார். கதாநாயகனாக நடிக்கும் போதும் சந்தானம் அனைவரையும் கலாய்த்து காமெடி செய்துவரும் நிலையில் கவுண்டமணி படத்தில் இணைந்ததால் யார் யாரை கலாய்ப்பர் என்ற கேள்வி எழுந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory