» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
கார்டிப் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி : தொடரை சமன் செய்தது இங்கிலாந்து!
வெள்ளி 17, ஜூலை 2026 12:00:27 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றுள்ளது.
கார்டிப் நகரின் சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் துவக்க வீரர்களாகக் கேப்டன் சுப்மன் கில் (31), ரோகித் சர்மா (26) ஆகியோர் களம் இறங்கினர். தொடர்ந்து விளையாடிய விராட் கோலி 65 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 66 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இஷான் கிஷன் (1), வாஷிங்டன் சுந்தர் (2), அக்சர் படேல் (1), ஷிவம் துபே (0), குர்னூர் பிரார் (7) மற்றும் பிரசித் கிருஷ்ணா (0) ஆகியோர் குறைந்த ரன்களில் வெளியேறினர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஜஸ்பிரித் பும்ரா 20 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 44 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர், அட்கின்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் டக்கெட் (0), பெத்தல் (4), கேப்டன் ஹாரி புரூக் (16), சாம் கர்ரான் (26), பட்லர் (17) ஆகியோர் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் விளையாடிய ஜோ ரூட் அரைசதம் கடந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். பின்வரிசையில் களம் இறங்கிய வில் ஜாக்ஸ் 30 ரன்களும், அட்கின்சன் ஆட்டமிழக்காமல் 23 ரன்களும் எடுத்து ஒத்துழைப்பு தந்தனர்.
இறுதிக் கட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 3 ரன்களும், ஜோ ரூட் சதம் கடக்க 1 ரன்னும் தேவை என்ற நிலையில் அட்கின்சன் பவுண்டரி விளாசியதால், ஜோ ரூட் 99 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இங்கிலாந்து அணி 44.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான தொடரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி வரும் ஜூலை 19 அன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காமன்வெல்த் விளையாட்டு: மும்முறை தாண்டுதல் பிரிவில் பதக்கம் வென்று தமிழக வீரர்கள் அசத்தல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:59:47 PM (IST)

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஜின்கியா ரஹானே ஓய்வு: வீடியோ வெளியிட்டு உருக்கம்!
வியாழன் 30, ஜூலை 2026 4:44:14 PM (IST)

காமன்வெல்த் போட்டி 2026: இந்திய வீரர்கள் சாதனை!
புதன் 29, ஜூலை 2026 11:18:45 AM (IST)

இலங்கை டெஸ்ட் தொடர்: ஷுப்மன் கில் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு!
செவ்வாய் 28, ஜூலை 2026 4:46:27 PM (IST)

வைபவ் சூர்யவன்ஷி அபாரம்: ஜிம்பாப்வேயை 3-0 என வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இந்தியா!
திங்கள் 27, ஜூலை 2026 4:59:28 PM (IST)

ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: நேரடியாகக் காலிறுதியில் களம் காணும் இந்தியா, பாகிஸ்தான்!
சனி 25, ஜூலை 2026 5:39:24 PM (IST)


