» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கும்ப்ளே - டிராவிட் பெயர்களில் கேலரிகள்
சனி 14, பிப்ரவரி 2026 3:52:10 PM (IST)
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் உள்ள கேலரிகளுக்கு, அனில் கும்ப்ளே மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் பெயர்களைச் சூட்டி கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சிறப்பித்துள்ளது.
இந்தியாவின் புகழ்பெற்ற சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் உள்ள கேலரிகளுக்கு, கிரிக்கெட் ஜாம்பவான்கள் அனில் கும்ப்ளே மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் பெயர்களைச் சூட்டி கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சிறப்பித்துள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இந்த இரு வீரர்களும் இந்திய கிரிக்கெட் அணிக்காகத் தங்களது ஈடு இணையற்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர்.இந்திய டெஸ்ட் அணியின் "தடுப்புச் சுவர்" என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ராகுல் டிராவிட், சர்வதேச அளவில் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாகத் திகழ்ந்தவர். இவர் இந்திய அணிக்காக 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 36 சதங்கள் மற்றும் 63 அரைசதங்களுடன் 13,288 ரன்களைக் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இவரது பேட்டிங் சராசரி 52.31 ஆகும். அதேபோல், 344 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 12 சதங்கள் மற்றும் 83 அரைசதங்களுடன் 10,889 ரன்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.
மறுபுறம், இந்திய அணியின் வெற்றிகரமான சுழற்பந்து வீச்சாளரான அனில் கும்ப்ளே, பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்தவர். இவர் 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 619 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, இந்திய அளவில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராகத் திகழ்கிறார். மேலும் 271 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 337 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்த இரு வீரர்களின் சாதனைகளைப் போற்றும் வகையில் சின்னசாமி மைதானத்தில் இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடைசி பந்தில் நழுவிய வெற்றி: உடைந்த மில்லர்; தேற்றிய அக்ஷர்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 10:12:28 AM (IST)

ஜெய்ஸ்வால் - வைபவ் அதிரடி: மும்பை அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ஹாட்ரிக் வெற்றி!
புதன் 8, ஏப்ரல் 2026 4:43:52 PM (IST)

தோனி இல்லையென்றால் பிளெமிங் பூஜ்ஜியம்: புள்ளிவிவரங்கள் சொல்லும் அதிர்ச்சி உண்மை!
புதன் 8, ஏப்ரல் 2026 4:06:30 PM (IST)

தோல்விக்கு நானே காரணம் - சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உருக்கம்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:28:56 AM (IST)

சிஎஸ்கே தொடர் தோல்வி: தலைமை மாறுமா? ருதுராஜ் - பிளெமிங் மீது ரசிகர்கள் அருப்தி!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:59:36 PM (IST)

சாம்சனை இப்போதே எடை போடாதீர்கள்! - சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் ஆதரவு
சனி 4, ஏப்ரல் 2026 11:13:13 AM (IST)

