» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பார்​வையற்​றோர் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட்: இந்திய அணி சாம்பியன்!

திங்கள் 24, நவம்பர் 2025 12:41:54 PM (IST)



சர்​வ​தேச பார்​வையற்​றோர் டி20 உலக கோப்பை கிரிக்​கெட் போட்டியில், இந்​திய மகளிர் அணி சாம்​பியன் பட்​டம் வென்​றது.

பார்​வையற்​றோர் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்டி இலங்​கை​யில் நடை​பெற்​றது. இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா- நேபாளம் அணி​கள் மோதின. இதில் இந்​திய அணி வெற்றி பெற்று சாம்​பியன் பட்​டம் வென்​றது. இலங்கை தலைநகர் கொழும்​பிலுள்ள பி.​சாரா ஓவல் மைதானத்​தில் இப்​போட்​டி​யி​யின் இறுதி ஆட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில் இந்​தி​யா, நேபாளம் அணி​கள் மோதின.

இறு​திப் போட்​டி​யில் முதலில் விளை​யாடிய நேபாள அணி 5 விக்​கெட் இழப்​புக்கு 114 ரன்​கள் எடுத்​தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்​திய மகளிர் அணி​யினர், 12 ஓவர்​களில் இலக்கை எட்டி 7 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் வெற்​றியைச் சுவைத்​தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory