» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கிளட்ச் செஸ் போட்டி: நகமுராவை பழிதீர்த்தார் குகேஷ்

புதன் 29, அக்டோபர் 2025 8:27:40 AM (IST)



முன்னணி வீரர்கள் மட்டும் பங்கேற்கும் கிளட்ச் செஸ் போட்டி அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. ரேபிட் முறையில் நடைபெறும் இந்த போட்டியில் உலக தரவரிசையில் டாப் 3 இடங்களில் உள்ள மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), ஹிகாரு நகமுரா, பாபியானோ கருனா (இருவரும் அமெரிக்கா) மற்றும் உலக சாம்பியனான குகேஷ் (இந்தியா) பங்கேற்றுள்ளனர்.

தொடக்க நாளில் நடந்த ஒரு ஆட்டத்தில் குகேஷ், ஹிகாரு நகமுராவை எதிர்கொண்டார். இதில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய குகேஷ் 46-வது நகர்த்தலில் நகமுராவை தோற்கடித்தார். சமீபத்தில் நடந்த இந்தியா- அமெரிக்கா இடையிலான காட்சி போட்டியில் நகமுரா, குகேசை வென்றார். அதனை தொடர்ந்து நகமுரா, குகேசின் ராஜாவை தூக்கி ஏறிந்து வெற்றியை கொண்டாடினார். அதற்கு இந்த ஆட்டத்தில் குகேஷ் பழிதீர்த்து கொண்டார்.

முதல் நாள் முடிவில் குகேஷ் 4 புள்ளிகளுடன் முதலிடத்திலும், கார்ல்சென் 3½ புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நகமுரா 3 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், பாபியானோ கருனா 1½ புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஆஸி சென்றடைந்த இந்திய டி20 அணி வீரர்கள்!

வெள்ளி 24, அக்டோபர் 2025 3:30:19 PM (IST)

Sponsored Ads




Thoothukudi Business Directory