» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சர்வதேச கால்பந்து உலக தரவரிசை: இந்தியா 134வது இடம்!

வெள்ளி 19, செப்டம்பர் 2025 12:02:22 PM (IST)

சர்வதேச கால்பந்து தரவரிசை பட்டியலில்  ஸ்பெயின் அணி, முதல் இடத்துக்கு முன்னேறியது. இந்திய அணி 134வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') வெளியிட்டது. இதில் இந்திய அணி, 133வது இடத்தில் இருந்து 134வது இடத்துக்கு தள்ளப்பட்டது. சமீபத்தில் தஜிகிஸ்தானில் நடந்த 'நேஷன்ஸ் கோப்பை' தொடரில் ஓமனை வீழ்த்திய இந்தியா, 3வது இடம் பிடித்தது.

'நடப்பு ஐரோப்பிய சாம்பியன்' ஸ்பெயின் அணி, கடந்த 11 ஆண்டுகளில் முதன்முறையாக 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறியது. கடந்த 2023, மார்ச் 23 முதல் விளையாடிய 27 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வலம் வந்தது. 'நடப்பு உலக சாம்பியன்' அர்ஜென்டினா அணி, முதலிடத்தில் இருந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. பிரான்ஸ் அணி 2வது இடத்துக்கு முன்னேறியது. இங்கிலாந்து அணி 4வது இடத்தில் நீடிக்கிறது. போர்ச்சுகல் அணி 5வது இடத்துக்கு முன்னேறியது. பிரேசில் அணி 6வது இடத்துக்கு தள்ளப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பிசிசிஐ தலைவராக நியமனம்? சச்சின் மறுப்பு!

வெள்ளி 12, செப்டம்பர் 2025 11:40:15 AM (IST)

Sponsored Ads




Thoothukudi Business Directory