» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி: டெஸ்ட் தொடர் சமன்!
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 4:45:41 PM (IST)

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை சமன் செய்தது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடி இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 247 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
23 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 396 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனையடுத்து, இங்கிலாந்து அணிக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 367 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
இந்தியா தரப்பில் இரண்டாவது இன்னிங்ஸில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிஎஸ்கே அணிக்கு பெரும் இழப்பு: அதிரடி வீரர் ஆயுஷ் மத்ரே தொடரிலிருந்து விலகல்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:11:09 PM (IST)

திலக் வர்மா சதம், அஸ்வனி அசத்தல் பந்துவீச்சு : வெற்றிப் பாதைக்கு திரும்பியது மும்பை!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:17:26 PM (IST)

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை: ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் புதிய சாதனை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 4:02:45 PM (IST)

மண்டல அளவிலான மின்னொளி கால்பந்து போட்டி: காயல்பட்டினம் எல்.கே. பள்ளி முதலிடம்
திங்கள் 20, ஏப்ரல் 2026 10:20:55 AM (IST)

பஞ்சாப் கிங்ஸிடம் படுதோல்வி: மும்பை அணியில் அதிரடி மாற்றமா? ஹர்திக் பாண்டியா ஆவேசம்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 11:06:10 AM (IST)

மீண்டும் ஒருமுறை தமிழகத்தின் பெருமையை உயர்த்திய வைஷாலி: நயினார் நாகேந்திரன் பாராட்டு
வியாழன் 16, ஏப்ரல் 2026 5:19:23 PM (IST)

