» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா உலக சாம்பியன்: கேப்டன் டெம்பா பவுமா சாதனை!
ஞாயிறு 15, ஜூன் 2025 11:25:04 AM (IST)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 27 ஆண்டுகளில் முதல் முறையாக தென்னாப்பிரிக்க அணி ஐசிசி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் திடலில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம், 27 ஆண்டுகளில் முதல் முறையாக தென்னாப்பிரிக்க அணி ஐசிசி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
பல ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் தென்னாப்பிரிக்க அணி பல ஏமாற்றங்களை சந்தித்து வந்த நிலையில், அதற்கு முற்று புள்ளி வைத்துள்ளார் கேப்டன் டெம்பா பவுமா. தென்னாப்பிரிக்க அணிக்கு பலரும் கேப்டனாக செயல்பட்டுள்ளபோதிலும், கோப்பையை வெல்லும் கனவை பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி நனவாக்கியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம், கேப்டன் டெம்பா பவுமா டெஸ்ட் போட்டிகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதிலிருந்து பவுமா 10 டெஸ்ட் போட்டிகளில் அணியை வழிநடத்தியுள்ளார். அதில் 9 வெற்றிகள் மற்றும் ஒரு டிரா அடங்கும். இதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் தோல்வியே காணாத கேப்டனாக அவர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாநில அளவிலான கால்பந்து போட்டி: தூத்துக்குடி அணி 3-0 என அபார வெற்றி!
ஞாயிறு 17, மே 2026 9:25:35 AM (IST)

லக்னோவுக்கு எதிராக பந்துவீச்சு வியூகம் பலிக்கவில்லை: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் வேதனை!
சனி 16, மே 2026 4:34:27 PM (IST)

தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி : பஞ்சாப் அணியின் பிளே-ஆப் வாய்ப்பில் சிக்கல்!
வெள்ளி 15, மே 2026 3:34:37 PM (IST)

சிஎஸ்கே பிளே-ஆப் செல்லுமா? கணிப்புகளும் - வெற்றி வாய்ப்புகளும்!
வெள்ளி 15, மே 2026 12:34:40 PM (IST)

கோவில்பட்டியில் மாநில ஆக்கிப் போட்டி: சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை!
வெள்ளி 15, மே 2026 8:32:25 AM (IST)

நெருக்கடியான தருணங்களே என்னைச் செதுக்குகின்றன: விராட் கோலி நெகிழ்ச்சி!
வியாழன் 14, மே 2026 4:58:29 PM (IST)


