» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர்: ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி மீண்டும் சாம்பியன்!
திங்கள் 9, ஜூன் 2025 10:47:09 AM (IST)

நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஜெர்மனியின் முனிச்சில் நடைபெற்ற நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், ஸ்பெயின் அணியை ரொனால்டோவின் போர்ச்சுகல் எதிர்கொண்டது. ஸ்பெயின் 21வது நிமிடத்தில் ஜூபிமெண்டி மூலம் முதலில் கோல் அடித்தது. ஆனால் 26வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின்நுனோ மென்டெஸின் அற்புதமான கோல் அடித்தார். பின்னர் 45வது நிமிடத்தில் ஸ்பெயினின் ஓயர்சபால் ஒரு கோல் அடித்தார்.
இதனால் முதல் பாதியில் ஸ்பெயின் 2 - 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இருப்பினும், 69வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ சூப்பரான கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.அடுத்து பெனால்டிஷூட் அவுட்டில் 5-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி, போர்ச்சுகல் அணி UEFA நேஷன்ஸ் லீக் சாம்பியன் பட்டத்தை வென்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிராஜ் அவுட்டான விதம் துரதிருஷ்டவசமானது: இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கருத்து
வியாழன் 17, ஜூலை 2025 3:25:11 PM (IST)

ஜடேஜா போராட்டம் வீண்: இந்திய அணி போராடி தோல்வி!
செவ்வாய் 15, ஜூலை 2025 8:28:42 AM (IST)

லார்ட்ஸ் மைதானத்தில் வரலாறு படைத்த வாஷிங்டன் சுந்தர்..!
திங்கள் 14, ஜூலை 2025 11:55:13 AM (IST)

விம்பிள்டன் நாயகன்: ஜனநாயகன் விஜய் ஸ்டைலில் ஜானிக் சின்னர் போஸ்டர் வைரல்!!
திங்கள் 14, ஜூலை 2025 11:25:38 AM (IST)

5 பந்தில் 5 விக்கெட்: அயர்லாந்து வீரர் வரலாற்று சாதனை!!
வெள்ளி 11, ஜூலை 2025 11:48:55 AM (IST)

இங்கிலாந்தில் டி -20 வென்று இந்திய மகளிர் அணி அசத்தல்!!
வியாழன் 10, ஜூலை 2025 5:51:43 PM (IST)
