» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு : பும்ரா விலகல்!
புதன் 12, பிப்ரவரி 2025 11:50:25 AM (IST)

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா விலகி உள்ளார்.
பாகிஸ்தானில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப். 19 முதல் மார்ச் 9 வரை நடைபெற உள்ளது. கடந்த 2023 உலக கோப்பை தொடரில் 'டாப்-8' இடம் பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட அணிகள் பங்கேற்க உள்ளன. இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் இதற்கு தகுதி பெறவில்லை. பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தான் செல்ல இந்தியா மறுத்தது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்க உள்ளன.
இதில் வங்கதேசம் (பிப். 20), பாகிஸ்தான் (பிப். 23), நியூசிலாந்து (மார்ச் 2) அணிகளை சந்திக்க உள்ளது. இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் தலைமையிலான இந்திய அணியில், வருண் சக்ரவர்த்தி, ராணா ஆகியோர் வாய்ப்பு பெற்றுள்ளனர். இத்தொடரில் இருந்து காயம் காரணமாக பும்ரா விலகி உள்ளார்.
இந்திய அணி வீரர்கள்: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி, பயணம் செய்யாத மாற்று வீரர்களாக, ஜெய்ஸ்வால், சிராஜ் மற்றும் ஷிவம் துபே ஆகிய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சூப்பர் யுனைடெட் செஸ் போட்டி: ரேபிட் பிரிவில் பட்டம் வென்றார் குகேஷ்
சனி 5, ஜூலை 2025 11:35:26 AM (IST)

269 ரன்கள் விளாசி ஷுப்மன் கில் சாதனை: இந்திய அணி 587 ரன் குவித்து அசத்தல்!
வெள்ளி 4, ஜூலை 2025 11:05:26 AM (IST)

கேப்டனாக பொறுப்பேற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதம்: சுப்மன் கில் அசத்தல்!
வியாழன் 3, ஜூலை 2025 10:10:20 AM (IST)

கவுண்டி கிரிக்கெட்டில் 820 ரன்கள் குவிப்பு: சர்ரே அணி வரலாற்று சாதனை!
செவ்வாய் 1, ஜூலை 2025 4:44:50 PM (IST)

டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்: கேசவ் மகராஜ் வரலாற்று சாதனை!!
திங்கள் 30, ஜூன் 2025 12:39:44 PM (IST)

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் : பும்ரா நீக்கம்!
வெள்ளி 27, ஜூன் 2025 10:51:40 AM (IST)
