» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
தூத்துக்குடி மாவட்ட அளவிலான கபடி போட்டி : முத்தையாபுரம் அணி முதல் இடம்!
செவ்வாய் 21, ஜனவரி 2025 10:58:29 AM (IST)

சாத்தான்குளம் அருகே நடந்த மாவட்ட அளவிலான கபடி போட்டியில் முத்தையாபுரம் அணி முதல் பரிசை வென்றது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆத்தி க்காடு சிவந்தி மலர் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 15 வயதிற்கு உட்பட்டோருக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் நடந்தது. போட்டியில் சாத்தான்குளம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் ஜி எஃப் சி முத்தையாபுரம் அணியும் ஆத்தி காடு சிவந்தி மலர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் மோதியது. இதில் முத்தையாபுரம் வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச் சென்றது.
பின்னர் பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு நவ முதலூர் பங்குத்தந்தை ஜேசுராஜா தலைமை வகித்தார். முதல் பரிசு பெற்ற முத்தையாபுரம் அணிக்கு விஜயாராபுரம் முத்துச்செல்வன் பரிசு வழங்கினார். . வெற்றி கோப்பையை மாவட்ட காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஆத்தி காடு முத்துராஜ் வழங்கினார்இரண்டாம் பரிசு. பெற்றஆத்தி காடுசிவந்தி மலர் அணிக்கு கட்டாரிமங்கலம் நயினார் பரிசும், வெற்றி கோப்பையை அகஸ்டினும் வழங்கினர்.
மூன்றாம் பரிசு பெற்ற. லவுனியா முத்தையாபுரம் அணிக்கு நீர்வளத்துறை உதவி பொறியாளர் அஜித் குமார் பரிசும்,வெற்றிக் கோப்பை ஜெகன் அகில் ராஜீம் வழங்கினர்.நான்காம் பரிசு. பெற்ற ஆத்திக்காடு அணிக்கு செல்வகுமார் பரிசுத்தொகையும், வெற்றி கோப்பையை ஜெகதீஷும் வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் காசி கோயில் உபதேசியார் சின்னத்தம்பி, அருள்ராஜ், ஜான்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை ஆத்திக்காடு சிவந்தி மலர் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சூப்பர் யுனைடெட் செஸ் போட்டி: ரேபிட் பிரிவில் பட்டம் வென்றார் குகேஷ்
சனி 5, ஜூலை 2025 11:35:26 AM (IST)

269 ரன்கள் விளாசி ஷுப்மன் கில் சாதனை: இந்திய அணி 587 ரன் குவித்து அசத்தல்!
வெள்ளி 4, ஜூலை 2025 11:05:26 AM (IST)

கேப்டனாக பொறுப்பேற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதம்: சுப்மன் கில் அசத்தல்!
வியாழன் 3, ஜூலை 2025 10:10:20 AM (IST)

கவுண்டி கிரிக்கெட்டில் 820 ரன்கள் குவிப்பு: சர்ரே அணி வரலாற்று சாதனை!
செவ்வாய் 1, ஜூலை 2025 4:44:50 PM (IST)

டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்: கேசவ் மகராஜ் வரலாற்று சாதனை!!
திங்கள் 30, ஜூன் 2025 12:39:44 PM (IST)

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் : பும்ரா நீக்கம்!
வெள்ளி 27, ஜூன் 2025 10:51:40 AM (IST)
