» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்: பும்ரா முதலிடம்!
வியாழன் 9, ஜனவரி 2025 11:57:38 AM (IST)

டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டிலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் ஜஸ்பிரீத் பும்ரா 908 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார்.
இடது கை சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா ஒரு இடம் முன்னேறி 9-வது இடத்தை, ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்டுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்திய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸையும் சேர்த்து 10 விக்கெட்களை வீழ்த்திய ஸ்காட் போலண்ட் 29 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாட ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை அடைந்துள்ளார்.
காயம் அடைந்துள்ள ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹேசில்வுட் இரு இடங்கள் பின்தங்கி 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் 3 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார். அவர், சிட்னி டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் 33 பந்துகளில் 61 ரன்கள் விளாசியிருந்தார். தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா 3 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். அதே அணியைச் சேர்ந்த கைல் வெரெய்ன் 4 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தை எட்டியுள்ளார். விராட் கோலி 3 இடங்கள் பின்தங்கி 27-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். தரவரிசை பட்டியலில் 12 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் அவர், கடும் சரிவை சந்தித்துள்ளார். கடைசியாக அவர், 2012-ம் ஆண்டு டிசம்பரில் 36-வது இடத்தில் இருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சூப்பர் யுனைடெட் செஸ் போட்டி: ரேபிட் பிரிவில் பட்டம் வென்றார் குகேஷ்
சனி 5, ஜூலை 2025 11:35:26 AM (IST)

269 ரன்கள் விளாசி ஷுப்மன் கில் சாதனை: இந்திய அணி 587 ரன் குவித்து அசத்தல்!
வெள்ளி 4, ஜூலை 2025 11:05:26 AM (IST)

கேப்டனாக பொறுப்பேற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதம்: சுப்மன் கில் அசத்தல்!
வியாழன் 3, ஜூலை 2025 10:10:20 AM (IST)

கவுண்டி கிரிக்கெட்டில் 820 ரன்கள் குவிப்பு: சர்ரே அணி வரலாற்று சாதனை!
செவ்வாய் 1, ஜூலை 2025 4:44:50 PM (IST)

டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்: கேசவ் மகராஜ் வரலாற்று சாதனை!!
திங்கள் 30, ஜூன் 2025 12:39:44 PM (IST)

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் : பும்ரா நீக்கம்!
வெள்ளி 27, ஜூன் 2025 10:51:40 AM (IST)
