» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஆஸ்திரேலிய மண்ணில் சதம்.. நிதிஷ் ரெட்டி புதிய சாதனை
சனி 28, டிசம்பர் 2024 4:17:42 PM (IST)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் நிதிஷ் ரெட்டி சதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. 'பாக்சிங் டே' என்று பாரம்பரிய பெயரில் அழைக்கப்படும் இந்த டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்டீவ் சுமித் 140 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3-வது நாள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ரன்கள் அடித்துள்ளது. நிதிஷ் ரெட்டி 105 ரன்களுடனும், சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்னும் 116 ரன்கள் பின்தங்கி உள்ளது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை இளம் வீரர்களான வாஷிங்டன் சுந்தர் - நிதிஷ் ரெட்டி 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்தி வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர். சுந்தர் அரைசதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். நிதிஷ் ரெட்டி சிறப்பாக விளையாடி சதமடித்த நிலையில் களத்தில் உள்ளார்.
இந்த சதத்தின் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் குறைந்த வயதில் சதம் அடித்த 3-வது இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை நிதிஷ் ரெட்டி படைத்துள்ளார்.
சாதனை வீரர்க்ள பட்டியல்:
1. சச்சின் - 18 வயது 256 நாட்கள்
2. ரிஷப் பண்ட் - 21 வயது 92 நாட்கள்
3. நிதிஷ் ரெட்டி - 21 வயது 216 நாட்கள்
4. தத்து பட்கர் - 22 வயது 46 நாட்கள்
இப்போட்டியில் வாஷிங்டன் சுந்தர் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 162 பந்துகளை சந்தித்து 50 ரன்கள் சேர்த்து இருந்தார். அதே போல, நிதிஷ் குமார் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 176 பந்துகளை சந்தித்து 105 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எட்டாம் வரிசையில் இறங்கிய வீரரும் ஒன்பதாம் வரிசையில் இறங்கிய வீரரும் ஒரே இன்னிங்ஸில் 150 பந்துகளுக்கும் அதிகமாக சந்தித்து புதிய வரலாறை படைத்து உள்ளனர். இதற்கு முன் இது போன்ற நிகழ்வு எப்போதும் நடந்ததில்லை. இவர்கள் இருவரும் இந்திய அணியை மீட்டதுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறை படைத்துள்ளனர்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் எடுத்தது. நிதிஷ் குமார் அடித்த சதம், ஜெய்ஸ்வாலின் 82 ரன்கள், வாஷிங்டன் சுந்தரின் 50 ரன்கள் ஆகியவற்றின் மூலம் பதிலடி கொடுத்து இருக்கும் இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 116 ரன்கள் பின் தங்கிய நிலையில் உள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் ஆட்டம் மீதம் உள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சூப்பர் யுனைடெட் செஸ் போட்டி: ரேபிட் பிரிவில் பட்டம் வென்றார் குகேஷ்
சனி 5, ஜூலை 2025 11:35:26 AM (IST)

269 ரன்கள் விளாசி ஷுப்மன் கில் சாதனை: இந்திய அணி 587 ரன் குவித்து அசத்தல்!
வெள்ளி 4, ஜூலை 2025 11:05:26 AM (IST)

கேப்டனாக பொறுப்பேற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதம்: சுப்மன் கில் அசத்தல்!
வியாழன் 3, ஜூலை 2025 10:10:20 AM (IST)

கவுண்டி கிரிக்கெட்டில் 820 ரன்கள் குவிப்பு: சர்ரே அணி வரலாற்று சாதனை!
செவ்வாய் 1, ஜூலை 2025 4:44:50 PM (IST)

டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்: கேசவ் மகராஜ் வரலாற்று சாதனை!!
திங்கள் 30, ஜூன் 2025 12:39:44 PM (IST)

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் : பும்ரா நீக்கம்!
வெள்ளி 27, ஜூன் 2025 10:51:40 AM (IST)
