» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
எல்லை மீறி விமர்சித்த ஆஸி ரசிகர்கள்.. முறைத்து பார்த்த விராட் கோலி!!
வெள்ளி 27, டிசம்பர் 2024 4:42:41 PM (IST)

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களுடன் தடுமாறி வருகிறது. இதில் 51 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை ஜெய்ஸ்வால் - விராட் கோலி பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தனர். 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. 82 ரன்கள் அடித்த நிலையில் ஜெய்ஸ்வால் ரன் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து சிறிது நேரத்திலேயே விராட் கோலி 36 ரன்களில் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார்.
விராட் கோலி ஆட்டமிழந்து பெவிலியன் சென்றபோது ஆஸ்திரேலிய ரசிகர்கள் கலாய்த்தனர். அதனை பொறுத்துக்கொண்டு சென்று கொண்டிருந்த விராட் கோலியை சிலர் எல்லை மீறி விமர்சித்துள்ளனர். இதனால் கோபமடைந்த விராட் திரும்பி வந்து அவர்களை முறைத்து பார்த்தார்.
இதனைக்கண்ட அங்கிருந்த பாதுகாவலர் கோலியை சமாதானம் செய்து திருப்பி அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைக்கண்ட இந்திய ரசிகர்கள் விராட் கோலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சூப்பர் யுனைடெட் செஸ் போட்டி: ரேபிட் பிரிவில் பட்டம் வென்றார் குகேஷ்
சனி 5, ஜூலை 2025 11:35:26 AM (IST)

269 ரன்கள் விளாசி ஷுப்மன் கில் சாதனை: இந்திய அணி 587 ரன் குவித்து அசத்தல்!
வெள்ளி 4, ஜூலை 2025 11:05:26 AM (IST)

கேப்டனாக பொறுப்பேற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதம்: சுப்மன் கில் அசத்தல்!
வியாழன் 3, ஜூலை 2025 10:10:20 AM (IST)

கவுண்டி கிரிக்கெட்டில் 820 ரன்கள் குவிப்பு: சர்ரே அணி வரலாற்று சாதனை!
செவ்வாய் 1, ஜூலை 2025 4:44:50 PM (IST)

டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்: கேசவ் மகராஜ் வரலாற்று சாதனை!!
திங்கள் 30, ஜூன் 2025 12:39:44 PM (IST)

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் : பும்ரா நீக்கம்!
வெள்ளி 27, ஜூன் 2025 10:51:40 AM (IST)
