» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ராகுல் குறித்த விமர்சனங்களுக்கு கம்பீர் பதிலடி
புதன் 23, அக்டோபர் 2024 5:22:37 PM (IST)

சமூகவலைதளங்களில் இருப்பவர்கள் இந்திய அணியின் பிளேயிங் லெவனை தீர்மானிக்க முடியாது என பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முன்னதாக இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இருப்பினும் இரண்டாவது இன்னிங்சில் ரிஷப் பண்ட் 99, சர்பராஸ் கான் 150 ரன்கள் அடித்து குறைந்தபட்சம் இந்தியாவை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றினர்.
குறிப்பாக சுப்மன் கில் காயமடைந்ததால் வாய்ப்பு பெற்ற சர்பராஸ் கான் முதல் இன்னிங்சில் டக் அவுட்டானார். ஆனால் அதே தவறை 2-வது இன்னிங்சில் செய்யாத அவர் தனது முதல் சதத்தை அடித்து 150 ரன்கள் குவித்து அசத்தினார். மறுபுறம் கே.எல். ராகுல் இந்த போட்டியிலும் 0, 12 ரன்கள் மட்டுமே அடித்து தோல்விக்கு முக்கிய காரணமானார்.
இந்த சூழ்நிலையில் சுப்மன் கில் காயத்திலிருந்து குணமடைந்து 2வது போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக ராகுலை நீக்கி விட்டு சர்பராஸ் கானை பிளெயிங் 11-ல் சேர்க்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.இந்நிலையில் சமூகவலைதளங்களில் இருப்பவர்கள் இந்திய அணியின் பிளேயிங் லெவனை தீர்மானிக்க முடியாது என பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது வருமாறு:- "முதலில் சமூக வலைதளங்கள் ஒரு பொருட்டே கிடையாது. சமூக வலைதளங்கள் அல்லது வல்லுனர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை வைத்து நீங்கள் வீரர்களை தேர்ந்தெடுக்க முடியாது. அணி நிர்வாகம் மற்றும் தலைமை நிர்வாகம் என்ன நினைக்கிறது என்பது முக்கியம். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் ஒவ்வொருவரும் மதிப்பிடப்படுவார்கள்.
இங்கே ஒவ்வொருவரின் செயல்பாடுகளும் மதிப்பிடப்படுகிறது. சமீபத்தில் கான்பூரில் கடினமான பிட்ச்சில் ராகுல் எங்களுடைய திட்டங்களுக்கு தகுந்தாற்போல் கொஞ்சம் நன்றாக பேட்டிங் செய்ததாக கருதுகிறேன். நாம் பெரிய ரன்கள் அடிக்க வேண்டும் என்பது அவருக்கும் தெரியும். அவருக்கு அந்த திறன் இருப்பதாலேயே அணி நிர்வாகமும் தொடர்ந்து ஆதரவளிக்கிறது" என்று கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேப்டனாக பொறுப்பேற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதம்: சுப்மன் கில் அசத்தல்!
வியாழன் 3, ஜூலை 2025 10:10:20 AM (IST)

கவுண்டி கிரிக்கெட்டில் 820 ரன்கள் குவிப்பு: சர்ரே அணி வரலாற்று சாதனை!
செவ்வாய் 1, ஜூலை 2025 4:44:50 PM (IST)

டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்: கேசவ் மகராஜ் வரலாற்று சாதனை!!
திங்கள் 30, ஜூன் 2025 12:39:44 PM (IST)

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் : பும்ரா நீக்கம்!
வெள்ளி 27, ஜூன் 2025 10:51:40 AM (IST)

ரிங்கு சிங் - பிரியா சரோஜ் எம்.பி. திருமணம் ஒத்திவைப்பு..?
வியாழன் 26, ஜூன் 2025 5:36:32 PM (IST)

லீட்ஸ் டெஸ்ட்: இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!
புதன் 25, ஜூன் 2025 8:50:17 AM (IST)
