» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சொந்த மண்ணில் சோகம்... 46 ரன்களில் சுருண்டது இந்திய அணி!
வியாழன் 17, அக்டோபர் 2024 3:56:45 PM (IST)

நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இந்திய அணி மோசமான சாாதனை படைத்துள்ளது.
பெங்களுருவில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் ரோகித் மற்றும் ஜெய்ஸ்வால் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். ரோகித் 2 ரன்களில் வெளியேறினார். கோலி மற்றும் சர்பராஸ் கான் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர். ஜெய்ஸ்வால் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல், ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் டக் அவுட்டாகி வெளியேறினார்.
பந்த் 20 ரன்கள், பும்ரா 1 மற்றும் குல்தீப் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். 31.2 ஓவர்களில் 46 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனது. இருவர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்டினர். 5 பேட்ஸ்மேன்கள் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். சொந்த மண்ணில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்துள்ள குறைந்தபட்ச ரன்களாக இது அமைந்துள்ளது. இது ஆசிய மண்ணில் பதிவு செய்யப்பட்ட குறைந்தபட்ச ரன்களாகவும் உள்ளது. இதற்கு முன்னர் 53 ரன்கள் ஒரு அணி எடுத்ததே குறைந்தபட்ச ரன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் மூன்றாவது குறைந்தபட்ச ரன்னாக இது அமைந்துள்ளது. கடந்த 2020-ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடிலெய்டில் 36 ரன்களும், 1974-ல் இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் 42 ரன்களும் எடுத்திருந்தது. சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா எடுத்துள்ள குறைந்தபட்ச ரன்களாக இது அமைந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேப்டனாக பொறுப்பேற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதம்: சுப்மன் கில் அசத்தல்!
வியாழன் 3, ஜூலை 2025 10:10:20 AM (IST)

கவுண்டி கிரிக்கெட்டில் 820 ரன்கள் குவிப்பு: சர்ரே அணி வரலாற்று சாதனை!
செவ்வாய் 1, ஜூலை 2025 4:44:50 PM (IST)

டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்: கேசவ் மகராஜ் வரலாற்று சாதனை!!
திங்கள் 30, ஜூன் 2025 12:39:44 PM (IST)

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் : பும்ரா நீக்கம்!
வெள்ளி 27, ஜூன் 2025 10:51:40 AM (IST)

ரிங்கு சிங் - பிரியா சரோஜ் எம்.பி. திருமணம் ஒத்திவைப்பு..?
வியாழன் 26, ஜூன் 2025 5:36:32 PM (IST)

லீட்ஸ் டெஸ்ட்: இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!
புதன் 25, ஜூன் 2025 8:50:17 AM (IST)
