» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட் 500 விக்கெட்டுகள் : அஸ்வின் புதிய சாதனை!

வெள்ளி 16, பிப்ரவரி 2024 3:43:44 PM (IST)



டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் இணைந்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 131 ரன்களும் , ஜடேஜா 112 ரன்களும் குவித்தனர்.

இதனையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலி மற்றும் பென் டக்கெட் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஜாக் கிராலியின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். இது டெஸ்ட் போட்டிகளில் அவரது 500-வது விக்கெட்டாக பதிவானது. இதன் மூலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அஸ்வின் மொத்தம் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். மேலும் இந்தியா தரப்பில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது பவுலர் என்ற வரலாறு படைத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியல் வருமாறு;

முத்தையா முரளிதரன் - 800 விக்கெட்டுகள்

சேன் வார்னே - 708 விக்கெட்டுகள்

ஜேம்ஸ் ஆண்டர்சன் - 690 விக்கெட்டுகள்

அனில் கும்ப்ளே - 619 விக்கெட்டுகள்

ஸ்டூவர் பிராட்- 604 விக்கெட்டுகள்

க்ளென் மெக்ராத் - 563 விக்கெட்டுகள்

கோர்ட்னி வால்ஷ் - 519 விக்கெட்டுகள்

நாதன் லயன் - 517 விக்கெட்டுகள்

அஸ்வின் - 500 விக்கெட்டுகள்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory